கங்கா கதாபாத்திரத்தில் இவரா.? சந்திரமுகி 2 படத்தின் அப்டேட்

லாரன்ஸ் நடிக்க பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “சந்திரமுகி 2”. இதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
இப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும், சரத்குமார், ராதிகா, வடிவேலு போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி. சந்திரமுகி 2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சந்திரமுகி 2-ல் முக்கியமான கதாபாத்திரமான ஜோதிகா நடித்த கங்கா வேடத்தில் நடிக்கப் போவது யார், என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கங்கா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.