8 வது நாளில் 20 டிக்கெட் விற்பனை; கங்கனா ரனாவத் நடிப்பில் 100 கோடி பட்ஜெட்டில் உருவான படத்திற்கு வந்த சோதனை!

 8 வது நாளில் 20 டிக்கெட் விற்பனை; கங்கனா ரனாவத் நடிப்பில் 100 கோடி பட்ஜெட்டில் உருவான படத்திற்கு வந்த சோதனை!

பிரபல சர்ச்சை நடிகை என்ற பெயர் பெற்றவர் கங்கனா ரனாவத். பல படங்களில் நாயகியாக நடித்து வந்த இவர், தற்போது முதன்மை கதாபாத்திரத்தின் கதையில் மட்டுமே தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், கங்கனா ரனாவத் நடிப்பில் மே 20ம் தேதி ‘தாக்கட்’ படம் வெளியாகியுள்ளது. இப்படம், சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க இந்த ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக ‘தாக்கட்’ உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ரேனிஷ் காய் இயக்கியுள்ளார்.

பாஜக-விற்கு எப்போதும் ஆதரவாக இருந்து வரும் கங்கனா ரணாவத், அவரது நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘தாக்கட்’ திரைப்படம் வெளியாகி அதிக வரவேற்பைப் பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே குறைவான வசூலையே பெற்று வருகிறது.

இப்படம் வெளியாகி 8 நாட்கள் ஆகியும் தற்போது வரை ரூ. 3.5 கோடி வரை மட்டுமே வசூலாகியுள்ளது. அதிலும் திரைப்படம் வெளியான 8-வது நாளில் இந்தியா முழுவதும் மொத்தம் 20 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

100 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம், பல திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டு வருகிறது. இது கங்கனா ரனாவத்-திற்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related post