டிஜிட்டல் உரிமம்; மிகப்பெரும் தொகைக்கு சென்ற ‘கங்குவா’!

 டிஜிட்டல் உரிமம்; மிகப்பெரும் தொகைக்கு சென்ற ‘கங்குவா’!

சூர்யா நடிக்க சிறுத்தை சிவா இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “கங்குவா”. சுமார் பத்து மொழிகளில் இப்படம் உருவாக இருக்கிறது.

படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை சுமார் 80 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றியிருக்கிறது அமேசான் நிறுவனம்.

இச்செய்தி இணையத்தில் பரவி, ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

ஜூன் மாதத்தில் படத்தின் டீசரை மிகவும் பிரமாண்டமான நிகழ்ச்சி ஒன்றை ஏற்படுத்தி அதில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post