இத்தனை நாட்களில் இத்தனை கோடி வசூலா.? காந்தாரா கொடுத்த சாதனை!

 இத்தனை நாட்களில் இத்தனை கோடி வசூலா.? காந்தாரா கொடுத்த சாதனை!

இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய திரைப்படம் தான் காந்தாரா. செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.முதலில் கன்னட மொழியில் வெளியான இத்திரைப்படம், அனைத்து இடங்களிலும் மகத்தான வரவேற்பு கிடைத்ததையொட்டி மற்ற மொழிகளிலும் இப்படம் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருந்த இப்படம் இதுவரை சுமார் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்துள்ளது.

கர்நாடகாவில் 168 கோடியும்
இந்தியில் 95 கோடியும்
தெலுங்கில் 60 கோடியும்
மலையாளத்தில் 19 கோடியும்
தமிழில் 12 கோடியும்
வெளிநாடுகளில் மட்டும் 40 கோடியும் வசூலை வாரிக்குவித்துள்ளது இந்த காந்தாரா.

வெறும் 16 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் 400 கோடி வரை வசூலை குவித்துள்ளது கன்னட ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Related post