கார்த்தியின் பேஸ்புக் பக்கம் முடக்கம்

விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என தொடர்ச்சியாக இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து வருகிறார் கார்த்தி.
இதனால் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார். தனது அடுத்த படத்திற்கான பணிகளில் தற்போது மும்முரமாக இறங்கியுள்ளார் கார்த்தி. ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர் கார்த்தி. இந்நிலையில், தனது பேஸ் புக் பக்கம் சிலரால் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும், விரைவில் மீட்கப்படும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கார்த்தி தெரிவித்துள்ளார்.
அதிலிருந்து வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார் கார்த்தி.