கார்த்தி நடிக்க அருண்ராஜா காமராஜ் இயக்க உருவாகும் பிரம்மாண்ட படம்!

 கார்த்தி நடிக்க அருண்ராஜா காமராஜ் இயக்க உருவாகும் பிரம்மாண்ட படம்!

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உருவாகியுள்ள “நெஞ்சுக்கு நீதி” இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இயக்குனர் அருண்ராஜா தனது அடுத்த படத்திற்கான பணிகளிலும் இறங்கி விட்டதாக தெரிகிறது. கார்த்தி ஹீரோவாக நடிக்க மிகப்பெரும் பொருட்செலவில் இப்படத்தை இயக்கவிருக்கிறார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க முடிவு செய்துள்ளது. PAN INDIA படமாக இப்படம் உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து முடித்ததும் அடுத்த படமாக இப்படத்தில் நடிக்க கார்த்தி முடிவு செய்துள்ளாராம்.

அநேக படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் படமாக்கப்படவுள்ளதாம். தெலுங்கு படத்தின் முன்னணி நட்சத்திரம் ஒருவர் இப்படத்தில் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Related post