கோடிகளை அள்ளிய சர்தார்.. விரைவில் இரண்டாம் பாகம்!

பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் சர்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருந்தது.
இப்படடத்தில் மேலும் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பிரின்ஸ் பிக்சர் தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இந்தத் திரைப்படம் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் இப்படம் இதுவரை உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு தரப்பால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
இத்திரைப்படம் நல்ல லாபத்தை கொடுத்த்துள்ளதால் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.