அண்ணன் சூர்யாவுக்கு நன்றி சொன்ன தம்பி கார்த்தி

 அண்ணன் சூர்யாவுக்கு நன்றி சொன்ன தம்பி கார்த்தி
Digiqole ad

நடிகர் சூரியா தயாரிக்கும் – கார்த்திக் நடிப்பில் முத்தையா இயக்கும் #விருமன் படபிடிப்பு முடிவடைந்தது.

தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான படைப்புகளை தந்து வருகிறது நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பான கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் “விருமன்” படத்தின் படபிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி மதுரையில் ஆரம்பமானது.

நீண்ட நாட்களுக்கு பின் மதுரை மக்களை பார்த்து சந்தோஷமடைகிறேன் என்றார் கார்த்தி. மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் படபிடிப்பு 60 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று டிசம்பர் 21ம் தேதி முடைவடைந்தது.

இதை பற்றி கார்த்தி சொல்லும் போது,
“மதுரை சுற்று வட்டாரத்தில் நல்ல திறமையுடன், சிறப்பான திட்டமிடலால், மொத்தமாக 60 நாள்கள் படபிடிப்பை நடத்தி உள்ளார்கள் இயக்குநர் முத்தையாவும் , ஒளிப்பதிவாளர் செல்வகுமாரும்.
என்னுடன் ஜோடியாக நடித்த அதிதி ஷங்கருக்கு சிறந்த எதிர்காலம் வுள்ளது,எதார்த்தமானவர்,அவருடன் நடித்த நாள்கள் ஜாலியானவை.

மீண்டும் இப்படம் மூலம் யுவன் சங்கர்ராஜாவுடன் இணைவதில் சந்தோஷம். 2D நிறுவனத்திற்கும் தயாரிப்பாளர் சூர்யா அவர்களுக்கும் நன்றி! “
இவ்வாறு கூறினார், கார்த்தி.

அறிமுகமாகும் அதிதி ஷங்கர் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்துள்ளார் என்கின்றனர் படபிடிப்பு குழுவினர்.பொதுவாக இயக்குநர் முத்தையா படங்களில் பெண் கதாப்பாத்திரங்கள் அழுத்தமிக்க.. வீரம் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும். அதே போல், தனது முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தில் நடித்துள்ளார் அதிதி ஷங்கர்.

இயக்குநர் முத்தையா எழுதி இயக்கும் இப்படத்தில் மேலும், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படம் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகிவுள்ளது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இணை தயாரிப்பு:ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்.
S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றார். கலை: ஜாக்கி, எடிட்டிங்:வெங்கட்ராஜ்,
நடனம்:ஷோபி, பாபா பாஸ்கர், ராதிகா, ஜானி.
PRO:ஜான்சன்

#விருமன் #Viruman ஒரு 2022 சம்மர் வெளியீடு.

படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு குறித்து பட நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

Digiqole ad
Spread the love

Related post