அறிமுக நாயகன் கார்த்திக் – ஷ்ரிதா சிவதாஸ் நடித்துள்ள வித்தியாசமான லவ் டிராமா ” டூடி “
Connecting Dots Productions என்ற புதிய பட நிறுவனம் தயாரிப்பில் உருவாக்கியுள்ள படம் ” டூடி”
இந்த படத்தில் கதாநாயகனாக கார்த்திக் மதுசூதன் நடித்துள்ளார். கதாநாயகியாக தில்லுக்கு துட்டு 2 படத்தில் நடித்த ஷ்ரிதா சிவதாஸ் நடித்துள்ளார். மற்றும் ஜீவா ரவி, ஸ்ரீ ரஞ்சனி , சனா ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை – K.C. பாலசாரங்கன்
ஒளிப்பதி – மதன் சுந்தர்ராஜ், சுனில் G N
எடிட்டிங் – சாம் RD.X
பாடல்கள் – அரவிந்த் குமார்
கலை இயக்கம் – கார்த்திக் மதுசூதன், நிஹாரிகா சதீஷ், ரத்தன் கங்காதர்.
மக்கள் தொடர்பு – மணவை புவன்
கதை – கார்த்திக் மதுசூதன்
திரைக்கதை, வசனம், இயக்கம் – கார்த்திக் மதுசூதன், சாம் RD.X
படம் பற்றி இயக்குனர் கார்த்திக் மதுசூதன் கூறியதாவது…
மனித உணர்வுகளின் மிகப்பெரிய உணர்வு என்றால் அது காதல்தான், அதற்கு எதிர்மறையானது கோவம். 18 வயதில் ஏற்படுகின்ற எண்ணங்கள் 25 வயதில் மாறும் 25 வயதில் ஏற்படும் எண்ணங்கள் 30 வயதில் மாறும் இதை அடிப்படையாக வைத்து தான் இந்த படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளேன்.
இப்போ வாழ்ந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினர் காதலித்து ஒரே வருடத்தில் நீ செய்றது எனக்கு பிடிக்கல நான் பண்றது உனக்கு பிடிக்கல நீ சரி இல்ல நான் சரியில்ல அப்பறம் பிரேக் அப், காதல் தோல்வி எல்லாம். அந்த எமோஷன்ஸ் தான் இந்த படம் முழுக்க பயணிக்கும்.
கொஞ்சநாள் கழித்து முன்ன போய் பாக்கும்போது எல்லாம் விதினு தோணும்.
லவ் டிராமா, குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். இன்றைய இளைய தலை முறையினருகான படம் இது. சென்னை மற்றும் பெங்களூருவில் நடக்கும் கதைக்களம் இது.
சென்னை, பெங்களூர், கூர்க் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இந்த படம் Anti Valentines day ( காதலர் தினமான பிப்ரவரி 14 க்கு பிறகு 7 நாட்கள் வெளி நாடுகளில் கொண்டாடுவார்கள் ) அன்று வெளியிட முடிவு செய்துள்ளோம். என்கிறார் நாயகனும் இயக்குனருமான கார்த்திக்.
படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்த நிலையில் தற்போது படத்தில் இடம்பெறும் ” ரகசிய காதலனே வா வா ” பாடலும் சமீபத்தில் வெளியாகி அனைவராலும் பார்க்கப்படுள்ளது.