கார்த்தி – விஜய்சேதுபதி இணையும் படத்தின் தலைப்பு இதுதானா.?

 கார்த்தி – விஜய்சேதுபதி இணையும் படத்தின் தலைப்பு இதுதானா.?

நடிகர் கார்த்தி தற்போது சர்தார், பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் படங்களை கையில் வைத்திருக்கிறது. மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

அடுத்தடுத்த படங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில், கார்த்தியின் அடுத்த படத்தை ஜோக்கர், குக்கூ படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கவிருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. படத்திற்கான முதற்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜப்பான் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post