கவினின் அடுத்த மாஸ்டர் ப்ளான்

 கவினின் அடுத்த மாஸ்டர் ப்ளான்

டாடா பட வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகிறார் ஹீரோ கவின். தனது அடுத்த படத்திற்கான பணியில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், ஹரீஷ் கல்யாணை வைத்து ப்யார் ப்ரேமா காதல் படத்தினை இயக்கிய எலன் கவினை வைத்து அடுத்த படத்தினை இயக்கவிருக்கிறார்.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார்.

நித்தம் ஒரு வானம் படத்தினை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related post