அஜித் படத்தில் கீர்த்தி!?

 அஜித் படத்தில் கீர்த்தி!?

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தனது 62 ஆவது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். லைகா நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறது.

இன்னும் இரண்டு வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வு இறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் திரிஷா நாயகியாக நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. தற்போது கூடுதல் தகவலாக இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியான செய்தியாக இருக்கிறது.. அதுமட்டுமல்லாமல் நடிகர் சந்தானம் இப்படத்தில் காமெடியனாக மீண்டும் களமிறங்கி இருக்கிறார் என்ற செய்தியும் உறுதியாகி இருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர் தகவல்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post