கே ஜி எஃப் பட நடிகர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்!

 கே ஜி எஃப் பட நடிகர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல கன்னட நடிகர் மோகன் ஜுனேஜா. குணசித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடிச்சு வந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். கே.ஜி.எஃப், சமீபத்தில் வெளியாகி மெகா ஹிட்டான கே.ஜி.எஃப் சாப்டர் 2 படங்களிலும் இவர் நடிச்சிருக்கார். சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள மோகன் ஜுனேஜா, சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக உடல் நலம்குன்றி காணப்பட்ட இவர், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது.

மோகன் ஜுனேஜாவின் மறைவு கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related post