இதுவரை இத்தனை கோடி வசூலித்துள்ளதா “கே ஜி எஃப் 2”.?

 இதுவரை இத்தனை கோடி வசூலித்துள்ளதா “கே ஜி எஃப் 2”.?

யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் தான் “கே ஜி எஃப் சாப்டர் 2”

ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இந்தி நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிரம்மாண்டமாக கடந்த ஏப்.14-ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

பல நாடுகளில் ரிலீஸான நாளில் இருந்தே இன்னமும் வசூலை குவித்து வரும் இப்படம், உலகம் முழுவதும் ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இப்போது 33 நாளில் ரூ.1200.76 கோடி வசூலித்து இப்படம் மேலும் சாதனை படைத்துள்ளது.

Related post