Koogle Kuttappa – திரைப்படம் விமர்சனம்

 Koogle Kuttappa – திரைப்படம் விமர்சனம்

மலையாளத்தில் வெளியான அண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் மருஉருவாக்கம் தான் இந்த கூகுள் குட்டப்பா. மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம்,அதை தமிழில் அதன் உண்மை தன்மை கெடாத வகையில் எடுத்திருக்கிறார்கள் இயக்குனர் சபரி சரவணன். இவர்கள் இயக்குனர் KS ரவிகுமார் அவர்களின் உதவி இயக்குனர்கள். இந்த படத்தை தயாரித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இயக்குனர் KS ரவிகுமார். படத்தின் கதை எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்ப கட்டமைப்புகளை வெறுக்கும் மனிதருக்கும், அவர் மகனால் அவரை பார்த்து கொள்ள சோதனை நிலையில் இருக்கும் ஒரு ரோபோவை விட்டு செல்கிறார். அந்த ரோபோவுக்கும் KS ரவிகுமார் அவர்களுக்கும் உருவாகும் ஒரு பாச பிணைப்பு தான் இந்த கூகுள் குட்டப்பா. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் KS ரவிகுமார் சிறப்பாக நடித்துள்ளார்.தந்தையாக படத்தில் கேஎஸ் ரவிக்குமார் நடித்திருக்கிறார். எந்த இடத்திலும் குறை சொல்லாத அளவிற்கு தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்துகிறார். அதேபோல் மகனாக பிக் பாஸ் தர்ஷன் அதே போல் இவர் முழு முயற்சி செய்திருந்தாலும் ஆங்காங்கே நடிப்பு எவ்வளவு கிலோ என்பது போல் தெரிகிறது.

அதேபோல் படத்தில் நாயகியோடு பங்கு இல்லை என்றாலும் கதைக்கு வைக்க வேண்டுமே என்ற நோக்கில் லாஸ்லியா வருகிறார். ஆனால், அவர் நடிப்பில் தர்ஷனுக்கு பாஸ் என்று அவர் மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்த படம் தமிழில் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். எளிமையாக முடிக்க வேண்டிய கதையை இரண்டரை மணி நேரம் எடுத்து சென்று இருக்கிறார்கள்.கே.எஸ். ரவிக்குமாரின் நடிப்பு, ரோபோவுக்கும் அவருக்கும் இடையே நடைபெறும் காட்சிகள், கே.எஸ். ரவிக்குமாரின் வயதான காலத்து ரொமான்ஸ் டிராக் மற்றும் ஜிப்ரானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. யோகி பாபு, பிராங்ஸ்டர் ராகுலின் காமெடி ஒரு சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. ஆர்வியின் ஒளிப்பதிவு ஓகே.படத்தை இன்னும் கொஞ்சம் க்ரிஸ்ப்பாக எடுத்திருந்தால் நல்லாவே இருந்திருக்கும் என்பதே படம் பார்ப்பவர்களின் கருத்தாக உள்ளது.இயக்குனர்களின் மெனக்கெடல் படத்தில் தெரிகிறது,குடும்பத்துடன் சென்று ரசிக்கும் படமாக கூகிள் குட்டப்பா அமைந்துள்ளது.

கூகிள் குட்டப்பா : ரசிக்கலாம் 

Related post