கொட்டுக்காளி – விமர்சனம் – 3/5
இயக்கம்: பி எஸ் வினோத் ராஜ்
நடிகர்கள்: சூரி, அன்னா பென்
ஒளிப்பதிவு: சக்தி
படத்தொகுப்பு: கணேஷ் சிவா
சவுண்ட் டிசைனர்: சுரேன், அழகிய கூத்தன்
தயாரிப்பு நிறுவனம்: சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்
தயாரிப்பாளர்: சிவகார்த்திகேயன்
கதைப்படி,
மதுரை மாவட்டத்தில் ஒரு அழகிய கிராமத்தில் கதை பயணப்படுகிறது. பித்து பிடித்தவர் போல் இருக்கும் தனது மாமா மகள் அன்னா பென்னை தனது சகோதரிகள் இருவர், தனது மாமா, அத்தை, அப்பா என குடும்பம் சகிதமாக அழைத்துக் கொண்டு சாமியார் ஒருவரிடம் செல்லத் தயாராகிறார் சூரி.
இந்த பயணத்தில் ஒரு சில சம்பவங்கள் நடக்கிறது. இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
ஒரு சில கதைகள் நம் மனதுக்குள் மிக ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லது பாதிப்பை ஏற்படுத்தும். அப்படியான ஒரு கதை தான் இந்த கொட்டுக்காளி.
ஒரு வாழ்வியலை, நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி மிகப்பெரும் படைப்பைக் கொடுத்துவிட்டார் இயக்குனர். கிராமத்தில் பிறந்தவர்கள் இப்படியான ஒரு பயணத்தை நிச்சயமாக அனுபவத்திருந்திருப்பர்.
வசனமாக இருக்கட்டும், உரைநடையாக இருக்கட்டும், உடல் மொழியாக இருக்கட்டும் என அனைத்து காட்சிகளையும் வாழ்வியலாகவே கொடுத்துவிட்டார் இயக்குனர்.
படத்தில் பயணப்படும் கதாபாத்திரங்களோடு நாமும் சேர்ந்து பயணப்படுவது போன்ற ஒரு உணர்வை கொடுத்துவிட்டார் இயக்குனர்.
சேவலை காட்சிப்படுத்திய விதமாக இருக்கட்டும், காளையை காட்சிப்படுத்திய விதமாக இருக்கட்டும் என பல இடங்களில் ஒளிப்பதிவாளர் சக்தியின் திறமையை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
சூரியிடம் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அடி வாங்கும் காட்சியை மிகவும் தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார்கள்.
சூரியின் தங்கைகளாக நடித்த இருவருமே அக்கதாபாத்திரமாகவே மாறியிருந்தனர். ஒரு அனுபவ நடிகர்கள் கொடுக்க வேண்டிய நடிப்பை இருவரும் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.
டயலாக் ஏதுமில்லாமல், அமைதியாக இருந்து தனது கண்களால் மட்டுமே நடித்து அனைவரையும் வெகுவாகவே கவர்ந்திருக்கிறார் அனா பென்.
தொண்டைக் கட்டிக் கொண்டவர் போல் பேசி, அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்து அசத்தி விட்டார் நடிகர் சூரி. பல இடங்களில் இவரது நடிப்பிற்கான ஸ்கோப் அதிகமாகவே இருந்தது. அதை சரியாகவே பயன்படுத்தியிருக்கிறார். அதிலும் சூரி சூறாவளியாக மாறி அனைவரையும் அடித்த காட்சி படபடக்க வைத்துவிட்டது.
படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட லைவ் ஆடியோ மட்டுமே படத்தில் வைத்துள்ளது கவனிக்கும்படியாக இருந்தது.
ஒரு சில காட்சிகள் கதைக்கு எந்த விதத்திலும் பயனளிக்கவில்லை. அதை தவிர்த்திருந்திருக்கலாம்.
மொத்தத்தில்,
கொட்டுக்காளி – வாழ்வியல்