நாளுக்கு நாள் அதிகரிக்கும் வசூல்; உற்சாகத்தில் “KRK” டீம்!

 நாளுக்கு நாள் அதிகரிக்கும் வசூல்; உற்சாகத்தில் “KRK” டீம்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பிரபு நடிக்க உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. கடந்த வியாழன் அன்று இப்படம் திரைக்கு வந்தது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ இப்படத்தை தயாரித்திருக்கிறது.

கலவையான ஒரு சில விமர்சனங்கள் எட்டிப்பார்த்தாலும், அனைத்தையும் துவம்சம் செய்யும் விதமாக நாளுக்கு நாள் பாக்ஸ் ஆபீசில் வசூலை குவித்து வருகிறது இப்படம்.

வியாழன் தொடங்கி சனிக்கிழமை வரை தொடர்ந்து மூன்று நாட்களும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இன்றும் திரையரங்குகள் அனைத்தும் நிரம்பியுள்ளது, நேற்றைய வசூலை இன்று முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமெடி, பாடல் என இரண்டும் இப்படத்திற்கு ப்ளஸ்ஸாக இருப்பதால் படத்திற்கு குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு படையெடுத்து வருகின்றனர். இதனால், படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Related post