குலசாமி விமர்சனம்

 குலசாமி விமர்சனம்

Tanya Hope, Vimal in Kulasamy Movie Stills HD

விமல், தான்யா ஹோப், கீர்த்தனா மற்றும் சிலர் நடித்திருக்கும் படம் “குலசாமி”. இப்படத்தை “குட்டிப்புலி” சரவண சக்தி இயக்கியுள்ளார்.

எதை பேசுகிறது இப்படம்?

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் மற்றும் கல்லூரி பேராசிரியை நிர்மலா அவர்களின் வாழ்க்கை அடிப்படையாக கொண்டு பாலியல் குற்றங்களுக்கு எதிரான ஒரு தீர்வு குற்றவாளிகளை கொலை செய்வது மட்டும் தான் என்று இப்படம் பேசியுள்ளது.

கதைப்படி,

மதுரையில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார் விமல். மருத்துவமனைக்கு தினமும் மதியம் 1 மணிக்கு கற்பழித்து கொலை செய்யப்பட்ட, தானமாக வழங்கிய தன் தங்கையின் உடலை பார்க்க செல்வார் விமல்.

அந்த கல்லூரியில் பேராசிரியையாக இருக்கும் வினோதினி கல்விக் கட்டணம் செலுத்த முடியாத ஏழைப் பெண்களிடம் நைசாகப் பேசி பணக்காரர் ஒருவரிடம் அனுப்பி வைப்பார்.

அது போன்று மாட்டிக் கொண்டு சிக்கித் தவித்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஆதாரங்களை தனது தோழியான தான்யா ஹோப்பின் மொபைலுக்கு அனுப்பிவிடுகிறார்.

தான்யாவைக் கொல்ல பணக்காரரின் அடியாட்கள் வருகிறார்கள். அவர்களிடமிருந்து தான்யாவைக் காப்பாற்றுகிறார் விமல். அதன் பின் என்ன ஆனது? விமல் தங்கையை கொன்றது யார்? அவரை எப்படி பழி தீர்த்தார் விமல்? என்பது படத்தின் மீதிக்கதை…

முழுக்க முழுக்க சீரியஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் விமல். தங்கச்சி சென்டிமென்ட் காட்சிகளில் அவரின் முகபாவனையும் நடிப்பும் சற்று தேர்ச்சி பெற வேண்டும்.

ஆனால், விலங்கு, தெய்வமச்சான் போன்ற கம் பேக் படங்களை கொடுத்த விமல். கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இது போன்ற படங்களில் நடிக்க சொன்னாலும் அதை தவிர்ப்பது அவரின் சினிமா கரியரை பாதிக்காமல் இருக்கும்.

படத்தின் கதாநாயகியாக தன்யா ஹோப், கொடுத்த பாத்திரத்தை சற்று சிறப்பாக செய்துள்ளார்.

கதாநாயகியை விட விமல் தங்கையாக நடித்திருக்கம் கீர்த்தனாவுக்கு பாத்திர வலு அதிகம். அதை சிறப்பாக செய்துள்ளர் கீர்த்தனா.

காமெடி பாத்திரங்களிலும், அண்ணி, அக்கா போன்ற பாத்திரங்களிலும் நடித்து வந்த வினோதினி, சமீப காலமாக வில்லத்தனத்தை கையில் எடுத்துள்ளார். அதை ஓகேவாக செய்துள்ளார்.

80, 90 கால கட்டத்தில் கூட இப்படியான படங்கள் வந்திருக்காது போல. 21ம் நூற்றாண்டுக்கான அப்டேட் தேவை இயக்குனரே.

மகாலிங்கம் இசையில் பாடல்கள் ஓகே, பின்னணி 90களுக்கானவை.

இப்படத்தின் வசனகர்த்தா விஜய் சேதுபதி என்றது எதற்காக? படத்தின் ப்ரோமோஷனுக்காகவா? நட்புக்காகவா? என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு தான் வெளிச்சம்.

குலசாமி – பேஸ்மெண்ட் ஸ்ட்ராங். பில்டிங் வீக்.

Related post