Kurup – திரைப்படம் விமர்சனம்

 Kurup – திரைப்படம் விமர்சனம்

துல்கர் சல்மான், ஷோபிடா துலிபலா, அனுபமா பரமேசுவரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீநாத் ராஜேந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சுசின் ஷாம் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த சுகுமார குருப் என்பவரின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அதில் குருப் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.

விமான படையில் பயிற்சி எடுத்த துல்கர் சல்மான் பாம்பேயில் வேலை செய்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக விடுமுறை எடுத்து செல்கிறார். பிறகு துல்கர் சல்மான் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகிறது. ஆனால் உயிருடன் இருக்கும் துல்கர் சல்மான், தனது பெயரை குருப் என்று மாற்றி வெளிநாடு செல்கிறார்.

வெளிநாடு செல்லும் துல்கர் சல்மான் தனது பெயரில் இன்ஸ்சுரன்ஸ் செய்து விட்டு மீண்டும் இந்தியா திரும்புகிறார். அந்த இன்ஸ்சுரன்ஸ் பணத்தை அபகரிக்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து முயற்சி செய்கிறார். இறுதியில் துல்கர் சல்மான் தனது இன்ஸ்சுரன்ஸ் பணத்தை காப்பாற்றினாரா? இல்லையா? தற்கொலை செய்து கொண்டதாக தகவலை பரப்பியது ஏன் என்ற கேள்விகளுக்கு விடை தருகிறது படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் துல்கர் சல்மான் சிறப்பாகவே நடித்திருக்கிறார். அவர் போடும் வேடங்கள் அனைத்தும் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது. படத்தின் நாயகி ஷோபிடா அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஷைன் டாம் சாக்கோவின் நடிப்பு அருமை.

படம் 1980களில் நடப்பது போல திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன். சுசின் ஷாம் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது.

Related post