லால் சலாம் படத்தில் மாஸ் காட்டும் ரஜினிகாந்த்!

 லால் சலாம் படத்தில் மாஸ் காட்டும் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தினை இயக்கி வருகிறார்.

இப்படத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிறப்பு தோற்றமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே செல்வராகவனிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

செல்வராகவனிடம் உதவியாளராக இருந்தது, தற்போது லால் சலாம் படத்திற்கு பேருதவியாக இருக்கிறதாம் ஐஸ்வர்யாவிற்கு.

லால்சலாம் படத்தின் திரைக்கதையில் செல்வராகவனின் பங்கு பெரும் பங்காம். 2013-ல் வெளிவந்த இந்தி Kai po che-படத்தின் அபீஷியல் ரீமேக்தான் லால்சலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அப்படத்தில் வரும் முஸ்லீம் கதாபாத்திரமொன்றை ரஜினிக்கு ஏற்றவாறு முக்கியக் கதாபாத்திரமாக மாற்றி பில்டப் கொடுத்து உருவாக்கியிருக்கிறார்களாம்.

 

Related post