லியோ இசை வெளியீட்டு விழா; இந்த டைம் வேற மாறி!!

 லியோ இசை வெளியீட்டு விழா; இந்த டைம் வேற மாறி!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார், சமீபத்திய பேட்டி ஒன்றில் லியோ படத்தினை பற்றி பேசியிருந்தார்.

அதில், லியோ படத்தினை பான் இந்தியா ரிலீஸாக மாற்றுவதற்கு விஜய்யை சம்மதிக்க வைத்தது நான் தான். அதுமட்டுமல்லாமல், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வழக்கமாக நடக்கும் சென்னையில் இல்லாமல், மதுரை அல்லது கோயம்புத்தூர் அல்லது திருச்சி இந்த மூன்று மாவட்டங்களில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் நடத்த திட்டம் இருப்பதாக கூறினார்.

இந்த மூன்று இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மிக பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டம் வகுத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார் லலித்.

 

Related post