6 நாட்களும் எங்க ராஜ்யம் தான்… “லியோ” படக்குழுவின் பக்கா ப்ளான்!

 6 நாட்களும் எங்க ராஜ்யம் தான்… “லியோ” படக்குழுவின் பக்கா ப்ளான்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் “லியோ”.

படத்தின் டைட்டிலை படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ப்ரொமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்ட படக்குழு ரசிகர்களுக்கு ஒரு விருந்தே படைத்து விட்டது.

இந்நிலையில், படக்குழுவினர் அனைவரும் தனி விமானத்தில் காஷ்மீர் பறந்து சென்றிருக்கிறது..

படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி, தீபாவளி கொண்டாட்டமாக வெளிவரும் என்று எண்ணிக் கொண்டிருந்த வேலையில், அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த வருடம் தீபாவளி தினம் ஞாயிறு கிழமை வருகிறது.

ஆகவே, அக்டோபர் 19 ஆம் தேதி வியாழக்கிழமை என்பதால், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என்று தொடர்ந்து 4 நாட்களையும் ப்ளாக் செய்து விட்டு அடுத்ததாக திங்கள், செவ்வாய் கிழமைகள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை என்பதால் இரண்டு தினங்களும் விடுமுறை தான்.

ஆக, மொத்தமாக 6 நாட்களையும் பக்கா பளான் போட்டு தூக்கியிருக்கிறார்கள் லியோ படக்குழுவினர்.

Related post