அவர் நெற்றியில் நான் முத்தமிட்டேன் – லியோ படத்தை முடித்த மிஷ்கின்

 அவர் நெற்றியில் நான் முத்தமிட்டேன் – லியோ படத்தை முடித்த மிஷ்கின்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிக்க உருவாகி வருகிறது “லியோ”. படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் மிஷ்கின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “காஷ்மீரில் இருந்த சென்னை திரும்புகிறேன். மைனஸ் 12 டிகிரியில் 500 பேர்கொண்ட லியோ படக்குழுவினர் கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது.

ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டை காட்சியை படமாக்கினார். உதவி இயக்குனர்களின் ஓயாத உழைப்பும், என்மேல் அவர்கள் காட்டிய அக்கறையும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார்.

படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குனராக அன்பாகவும், கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தார். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினார். அவர் நெற்றியில் நான் முத்தமிட்டேன்.

என் அருமை தம்பி விஜயுடன் ஒரு நடிகனாக இந்தப்படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும், அவரது அன்பையும் நான் என்றும் மறவேன்.

லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும். அன்புடன் மிஷ்கின்.” என்று கூறியுள்ளார்.

 

Related post