லியோ வசூலுக்கு அணை போடுமா “பொன்னியின் செல்வன் 2”.?

 லியோ வசூலுக்கு அணை போடுமா “பொன்னியின் செல்வன் 2”.?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”. இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இப்படம் ஆயுத பூஜை விடுமுறை தினத்தை முன்னிட்டு அக்டோபர் 19 ஆம் தேதி வெளிவரும் என படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதுஒருபுறம் இருக்க, மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடிக்க உருவாகியிருக்கும் “பொன்னியின் செல்வன் 2” திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில், படத்தின் VFX பணிகள் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் லியோ வெளியாகும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதியே பொன்னியின் செல்வன் 2 வெளிவர அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி வெளியாகும் பட்சத்தில் லியோ படத்தின் வசூல் பெரிதாக பாதிக்கப்படும் என்கிறார்கள்.

 

Related post