லியோ லீக் வீடியோ… படக்குழு எடுத்த அதிரடி!

 லியோ லீக் வீடியோ… படக்குழு எடுத்த அதிரடி!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது லியோ. காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ஷூட்டிங்க் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட விஜய்யின் வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக பரவியது.

இதனால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். ஆகவே, படப்பிடிப்பு தளத்திற்கு வரும் எவரும் இனி கைபேசிகளை கொண்டு வரக்கூடாது என அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.

அதுமட்டுமல்லாமல், வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தால் அதை எச்சரிக்கை இன்றி உடனே நீக்கப்படும் எனவும் தயாரிப்பு தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Related post