சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறிய லோகேஷ்.. காரணம் இதுதானாம்.?

 சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறிய லோகேஷ்.. காரணம் இதுதானாம்.?

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

அதிலும், இவர் கடைசியாக விக்ரம் மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. சுமார் 500 கோடிக்கும் மேல் இப்படம் வசூலை வாரிக் குவித்தது.

பலரும் இப்படத்தினால் மிகப்பெரும் வருமானத்தை ஈட்டிக் கொண்டனர்.

இந்நிலையில், இவர் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து தகவல் பரவி வருகிறது. ஆனால், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.

இயக்குனர் லோகேஷ் கனகராஜும், தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாகத் தான் படத்தின் அறிவிப்பு வரும் என்றும் , அதுவரை எந்த அப்டேட்டும் தன்னால் கொடுக்க இயலாது என்று கூறி வந்தார்.

இந்நிலையில், நேற்று திடீரென தான் சமூக வலைதளங்கள் அனைத்திலிருந்தும் தற்காலிகமாக வெளியேறுவதாகவும், அடுத்த படத்தின் அறிவிப்பு சமயத்தில் மீண்டும் வருகிறேன் என்று கூறி வெளியேறினார்.

தளபதி விஜய் ரசிகர்கள் தொடர்ந்து லோகேஷ் கனகராஜிடம் அப்டேட் கேட்டுக் கொண்டே இருப்பதால் தான், அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related post