தளபதி67 LCU-வா? கைதி 2 எப்போது? ரோலெக்ஸ்காக ஒரு படம் – போதும் போதும் என்ற அளவுக்கு லோகேஷ் கனகராஜ் தந்த அப்டேட்;

 தளபதி67 LCU-வா? கைதி 2 எப்போது? ரோலெக்ஸ்காக ஒரு படம் – போதும் போதும் என்ற அளவுக்கு லோகேஷ் கனகராஜ் தந்த அப்டேட்;

சினிமா ரவுண்ட் டேபிள் 2022 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய லோகேஷ் கனகராஜ் தளபதி 67, கைதி 2, விக்ரம் சீக்வெல் மற்றும் ரோலக்ஸ் ப்ரீக்வெல் பற்றி பேசியிருப்பது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் வசம் வைத்துள்ளார்.

இந்த சினிமா ரவுண்ட் டேபிளில் கமல்ஹாசன், ராஜமெளலி, கெளதம் மேனன் மற்றும் லோகேஷ் கனகராஜும் பங்கேற்று பேசினார். அதில் பல தகவல்களை பகிர்ந்துக்கொண்ட லோகேஷ் கனகராஜ்,

தளபதி 67 LCU படமா?

விஜய்யுடன் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மீண்டும் அவரை வைத்து தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். அதற்கான பூஜை சமீபத்தில் படு சீக்ரெட்டாக ஏவிஎம் ஸ்டூடியோவில் போடப்பட்டது. த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்ட நடிகர்கள் தளபதி 67ல் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர்கள் மட்டுமின்றி கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி கூட ஸ்பெஷல் கேமியோவாக தளபதி 67 படத்தில் நடிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜின் யூனிவர்ஸாகவே இந்த படம் இருக்கும் என்றும் எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளன. தளபதி 67 படத்தின் ஷூட்டிங் ஜனவரி மாதம் தொடங்கவுள்ள நிலையில், விஜய் சமீபத்தில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் டிரெண்டாகி அடுத்த சம்பவத்துக்கு லோகேஷ் மற்றும் விஜய் ரெடியாகிட்டாங்க என கமெண்ட்டுகள் பறந்தன.

கைதி 2 :

தளபதி 67 படத்தை அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதத்திற்குள் முடித்து விட்டு அடுத்து கார்த்தியின் கைதி 2 படத்தை ஆரம்பிக்க ரெடியாகி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

தளபதி 67 படத்திற்கு பிறகு கார்த்தியின் கைதி 2 அடுத்து விக்ரம் படத்தின் சீக்வெல் மற்றும் ப்ரீக்வெல் என யூனிவர்ஸில் பல படங்கள் காத்திருக்கின்றன என்றார் லோகேஷ் கனகராஜ்.

ரோலக்ஸ் ப்ரீக்வெல் :

விக்ரம் படத்தின் கிளைமேக்ஸில் சில நிமிடங்கள் வந்து செல்லும் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் இந்த ஆண்டு மறக்க முடியாத கேரக்டராக மாறி உள்ளது. ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து ஒரு முழு திரைப்படத்தை இயக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்த நிலையில், ஸ்டாண்ட் அலோன் படமாக ரோலக்ஸ் உருவாகும் என்றும் பேசியுள்ளார்.

Related post