இன்று சந்தீப் செய்ததை அன்றே செய்துவிட்டார் விஷால்;

 இன்று சந்தீப் செய்ததை அன்றே செய்துவிட்டார் விஷால்;

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், சந்தீப் கிஷன், கெளதம் வாசுதேவ் மேனன், விஜய் சேதுபதி, திவ்யன்ஷா, வரலக்ஷ்மி சரத் குமார் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “மைக்கேல்”. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார்.

படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுடன் அதகளமான டீசர் வெளியாகி இளசுகளிடையே பிரபலமும் ஆனது.

வருகிற 3ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

என்ன செய்தார் சந்தீப்;

லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் தளபதி67 படம் இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை கொண்டும், படம் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே பல கோடிகளுக்கு வியாபாரம் ஆகியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், பிப்ரவரி 1,2,3 என மூன்று நாட்களும் தளபதி 67 படத்தின் அப்டேட்டுகள் குவியும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்த நிலையில், மைக்கேல் படத்தின் ப்ரோமோஷன் போது. தளபதி 67 படத்தின் அன்னவுன்சமண்ட் வீடியோவை பற்றி பேசி வருகிறார் சந்தீப்.

மைக்கேல் படத்தின் ப்ரோமோஷன் போது சம்பந்தமே இல்லாமல் விஜய் படத்தை பற்றிய அப்டேட்டை கொடுத்து மைக்கேல் படத்தை பெரிய அளவில் ப்ரொமோட் செய்து வருகிறார் சந்தீப்.

விஷால் செய்ததும் இது தான்;

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விஷால் நடிப்பில் வெளியான “லத்தி” திரைப்படத்தின் ப்ரோமோஷன் போதும். இத்தனை ஆண்டுகள் இல்லாமல் திடீரென எனக்கு விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கவேண்டும் என ஆசை என்று ஒரு விஷயத்தை தவறாது அவர் பேசிய அனைத்து மேடைகளிலும் பதிவு செய்து. அவர் மீதான கவனத்தை ஈர்த்து, லத்தி படத்திற்கான ஒரு விளம்பரத்தையும் தேடிக்கொண்டார் விஷால்.

என்னதான் விஷால் லத்தி படத்தின் விளம்பரத்திற்கு பாடுபட்டாலும், கலவையான விமர்சனங்களை பெற்று படத்தின் ஓட்டமும் சுமாராகவே இருந்தது.

மைக்கேல் படத்திற்கும் இதே மாதிரியான விளம்பரங்கள் நடந்து வரும் வேளையில் மைக்கேல் திரைப்படம் எப்படி இருக்கும் என்று பொறுத்திடுத்து தான் பார்க் வேண்டும்.

Related post