எதுவா இருந்தாலும் வாரிசு ரிலீசுக்கு அப்புறம்தான் – லோகேஷ் கனகராஜ்!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது.
வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பே, விஜய்யின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிற வைத்திருக்கிறது.
காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவரது அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணை எட்டியது.
சில தினங்களுக்கு முன் “தளபதி 67” படத்தின் பூஜை போட்டபிறகும் அதுகுறித்து எந்தவித செய்தியும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், லத்தி விழாவில் பங்கேற்றப் பிறகு பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த லோகேஷ், “வாரிசு படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சென்று கொண்டிருப்பதால், அடுத்த படத்தினை பற்றி எதுவும் இப்போதைக்கு பேச முடியாது. தயாரிப்பாளர் தரப்பு மட்டுமே அதன் அறிவிப்பை வெளியிடுவார்கள்.
வாரிசு படம் வெளியான பிறகு தொடர்ந்து அப்டேட் கொடுத்துக் கொண்டே இருப்போம். நானே பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன்.” என்று கூறினார்.