ரஜினியை இயக்கும் லோகேஷ்!?

 ரஜினியை இயக்கும் லோகேஷ்!?

ரஜினி நடித்துவரும் ஜெயிலர் படத்தினை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். படம் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தினைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் செய்தி சில தினங்களுக்கு முன் வெளியானது.

இதனைத் தொடர்ந்து ரஜினியின் 171வது படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் லோகேஷுக்கு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், லியோ படத்தினை முடித்ததும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ஒரு படத்தை முடித்து, பின் ரஜினியின் 171வது படத்தை இயக்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post