லவ் டுடே ஹிந்தி ரீமேக்கில் நடிப்பது இவர்கள் தான்;

 லவ் டுடே ஹிந்தி ரீமேக்கில் நடிப்பது இவர்கள் தான்;

கடந்த 2019ஆண்டு “கோமாளி” என்ற பிளாக் பஸ்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.

சமீபத்தில் இவர் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ படத்தின் மூலம் நடிகராகவும் நல்ல வரவேற்பை பெற்றார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, இப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்துள்ளது. இதனை படக்குழு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தி கொண்டாடினர். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் இந்தி ரீமேக் தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது. அதன்படி இப்படத்தின் இந்தி ரீமேக்கை பாந்தோம் ஃபிலிம்ஸ் (Phantom Films) உடன் இணைந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் ஆமீர்கானின் மூத்த மகனான ஜுனைத்தும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகளான குஷி கபூரும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் எதிர்பார்ப்பு பாலிவுட்டிலும் எகிறியுள்ளது.

Related post