மா.பொ.சி. படத்தின் டைட்டிலை மாற்றிய போஸ் வெங்கட்!

 மா.பொ.சி. படத்தின் டைட்டிலை மாற்றிய போஸ் வெங்கட்!

எல்லோராலும் நடிகராக அறியப்பட்ட போஸ் வெங்கட், முதன் முதலாக இயக்கிய திரைப்படம் தான் கன்னி மாடம். இத்திரைப்படம் அனைவராலும் பெரிதாக பாராட்டப்பட்டது.

இவர் அடுத்ததாக விமலை வைத்து மா.பொ.சி. என்ற படத்தினை இயக்கி முடித்திருக்கிறார்.

SSS பிக்சர்ஸ் மற்றும் வெற்றிமாறனின் Gross Root Film Company நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரித்திருக்கிறார்கள்.

தவிர்க்க முடியாத சில காரணத்தினால், மா.பொ.சி. என்ற டைட்டிலை “சார்” என மாற்றியமைத்திருப்பதாக இயக்குனர் போஸ் வெங்கட் கூறியுள்ளார்.

படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து விரைவில் வெளிவரும் எனவும் படக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post