பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகும் ”மாமனிதன்”!

 பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகும் ”மாமனிதன்”!

தேசிய விருது இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது மாமனிதன் திரைப்படம்.

இப்படத்தில் விஜய்சேதுபதி, குரு சோமசுந்தரம், காயத்ரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜா இருவரும் சேர்ந்து முதன் முதலாக இசையமைத்திருந்த திரைப்படம் இதுவாகும்.

ஒரு மனிதனின் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை மதங்கள் கடந்த நட்பால் அன்பால் எவ்வாறு எதிர் கொண்டு கடக்கிறான் என்பது படத்தின் ஒன்லைனாக இருக்கிறது.

மாமனிதன் திரைப்படம் வளர்ந்து வரும் பிரபல ஓடிடி தளமான aha ஓடிடி தளத்தில் ஜூலை 15 வெளிவருகிறது.

 

Related post