மாமன்னன் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடியா.!?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு என நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமானோர் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் மாமன்னன்.

இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஏ ஆர் ரகுமான்…

இது தான் உதயநிதி நடிப்பில் வெளிவர இருக்கும் கடைசி திரைப்படமாகும். தமிழக அமைச்சராக உதயநிதி பதவியேற்றுக் கொண்டதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார் உதயநிதி.

இந்நிலையில், மாமன்னன் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 23 கோடி கொடுத்து கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன் என்ற இரண்டு மாபெரும் ஹிட் கொடுத்த மாரி செல்வராஜின் அடுத்த படம் மாமன்னன் என்பதால் இப்படத்திற்கு அப்படியொரு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Related post