வடிவேலுவின் மரணத்தில் ஆரம்பிக்கும் மாரி செல்வராஜின் “மாமன்னன்”;

 வடிவேலுவின் மரணத்தில் ஆரம்பிக்கும் மாரி செல்வராஜின் “மாமன்னன்”;

பரியேறும் பெருமாள், கர்ணன் என இரண்டு படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமான இயக்குனர் தான் மாரி செல்வராஜ்.

தாழ்த்தப்பட்ட சமூதாய மக்களின் வலியையும் அவர்களுக்கு நடந்திருக்கும் ஒரு உண்மை சம்பவத்தையும் மையமாக கொண்டே இவர்களின் படங்கள் இருக்கும்.

வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் தான் “மாமன்னன்”.

சில திங்களுக்கு முன் இப்படத்தில் வடிவேலு பாடிய “ராசா கண்ணு” பாடல் ஹிட் அடித்து மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

இந்நிலையில், “கருப்பி” என்ற நாயின் மரணத்தில் ஆரம்பிக்கும் படம் “பரியேறும் பெருமாள்”. “கர்ணன்” படத்தில் தனுஷின் தங்கை மரணம் என இவர் இயக்கிய இரண்டு படங்களும் மரணங்களுடனே ஆரம்பமாகும்.

அப்படி இருக்க, “மாமன்னன்” திரைப்படம் வடிவேலுவின் மரணத்தில் தான் ஆரம்பிக்கும் என்று ட்விட்டர் குருவிகள் ட்வீட் செய்து படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றனர்.

இது குறித்து பலரும் பல கருத்துக்கள் தெரிவிக்கும் நிலையில், படத்தை பார்த்தால் மட்டுமே படத்தின் போக்கும், ஆரம்பமும் சுவாரஸ்யமாய் இருக்கும்.

பார்ப்போம் இம்முறை மாரி செல்வராஜ் எப்படி படத்தை ஆரம்பிக்கிறார் என்று.

Related post