மாநாடு உண்மையான கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.? தயாரிப்பாளரே கொடுத்த ரிப்போர்ட்!!

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு, கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இதில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரிதர்ஷன் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
இந்த படம் இதுவரை சுமார் 117 கோடி ரூபாய் வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் சிம்பு, வெங்கட்பிரபு, யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.