வதந்திகளை நம்பாதீங்க.. விளக்கம் கொடுத்த “மாவீரன்” படக்குழு!

 வதந்திகளை நம்பாதீங்க.. விளக்கம் கொடுத்த “மாவீரன்” படக்குழு!

மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகி வரும் படம் தான் “மாவீரன்”.

இப்படத்தின் டைட்டில் வீடியோ மிகப்பெரும் அளவில் அனைவராலும் பெரிதும் கவரப்பட்டது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

இந்நிலையில், படப்பிடிப்பின் போது மடோன் அஸ்வினுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும், அதனால் ஷீட்டிங் நிறுத்தப்பட்டதாவும் தகவல் வெளியானது, அதனைத் தொடர்ந்து சமாதானம் நடத்தப்பட்டு ஷூட்டிங் தொடங்கிய நிலையில், மறுபடியும் டைரக்டருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்துமோதல் ஏற்பட்டதாகவும், இதனால் நிறைய சீன்களை மீண்டும் எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமே விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

அந்த விளக்கத்தில், “ “மாவீரன் படம் குறித்து ஆதாரமற்ற வதந்திகளும், பொய்யான செய்திகளும் தொடர்ந்து பரவி கொண்டே இருக்கிறது. அவற்றை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். மறக்கமுடியாத ஒரு படத்தை தர மாவீரன் படக்குழு தொடர்ந்து உழைத்து வருகிறது” என்று குறிப்பிட்டதோடு, அத்துடன்

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்

குறள் 291

விளக்கம்:

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.” என்ற குறளையும் அதற்கான விளக்கத்தையும் படக்குழு தெரிவித்துள்ளது.

Related post