கடவுளும் அறிவியலும்; தெய்வீகமாக நடைபெற்ற “மாயோன்” ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

 கடவுளும் அறிவியலும்; தெய்வீகமாக நடைபெற்ற “மாயோன்” ட்ரெய்லர் வெளியீட்டு விழா!
Digiqole ad

Double Meaning Production சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து வழங்க, N.கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ் ,தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் “மாயோன்”. புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.

சென்னையில் தனியார் கல்லூரியில் மாணவர்கள் முன்னிலையில் வித்தியாசமாக படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

விஷ்ணுவின் சிலை வடிவமைக்கபப்ட்டு, படத்தின் விளம்பரத்திற்காக சுமார் 40 நாட்கள் தமிழகம் முழுவதும் ரத யாத்திரையாக அனுப்பப்படுகிறது.

இவ்விழாவில் பாரம்பரிய கலையான தோல் பாவை கூத்து நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது.
மேலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக, அவர்கள் முன்னிலையில் அவர்களுக்காக ஆடியோ விளக்கத்துடன் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட டிரெய்லர் வெளியிடப்பட்டது

யாகம் வளர்க்கப்பட்டு, அதன் பிறகே நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பக்தியும் பரவசமுமாக நிகழ்ச்சி நடைபெற்றது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

படம் இம்மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 

Digiqole ad
Spread the love

Related post