கோடிகளை குவிக்கும் மகாராஜா!

 கோடிகளை குவிக்கும் மகாராஜா!

இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், சிங்கம்புலி, அபிராமி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் மகாராஜா.

படம் வெளியாகி அனைத்து தரப்பினரிடையேயும் நல்லதொரு வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

முதல் நாள் வசூலை விட அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகமானது. தொடர்ந்து நான்கு நாட்களில் சுமார் 36 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.,

நேற்றைய தினம் வேலை நாள் என்பதால் வசூல் சற்று குறைவான நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் 50 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post