அரண்மனை 4, கருடன் படங்களைத் தொடர்ந்து வெற்றிக் கோட்டை எட்டும் “மகாராஜா”!

 அரண்மனை 4, கருடன் படங்களைத் தொடர்ந்து வெற்றிக் கோட்டை எட்டும் “மகாராஜா”!

சில வாரங்களுக்கு முன் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்து ஹிட் அடித்த படம் தான் அரண்மனை 4.

இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து சுமார் 100 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்தது.

அதனைத் தொடர்ந்து வெளியான சூரியின் கருடன் திரைப்படமும் குடும்பங்களை திரையரங்குகளுக்கு அள்ளிக் கொண்டு வந்தது. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையில், சுமார் 50 கோடி ரூபாய் வசூலை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் விஜய் சேதுபதி நடித்து வெளியாகியிருக்கும் மகாராஜா திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

குடும்ப ரசிகர்கள் மத்தியிலும் நல்லதொரு வரவேற்பைப் பெற்றுள்ளதால், விடுமுறை தினத்தில் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியிருக்கும் இப்படமும் தமிழ் சினிமாவில் ரசிகர்களை திரையரங்கிற்குள் கட்டிப் போட்டு வைத்திருக்கும் பெருமையை அடைந்து விட்டது.

 

Related post