ஒய் ப்ளஸ் பாதுகாப்பில் சல்மான்கான்.. பரபரக்கும் பாலிவுட்

பிரபல நடிகரான சல்மான் கானுக்கு பஞ்சாப் அரசாங்கத்தால் ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன் பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
இவரது கொலைக்கு பின்னால் பிரபல பஞ்சாப் தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம்கானுக்கு கொலை மிரட்டல் வந்தது. அவர்களுக்கு வந்த மிரட்டல் கடிதத்தில், சித்து மூஸ்வாலாவுக்கு ஏற்பட்ட கதியை சந்திப்பீர்கள் என கூறப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து நடிகர் சல்மான்கான், தான் வழக்கமாக பயன்படுத்தும் காரை குண்டுகள் துளைக்காதவாறு புல்லட் ப்ரூப் கண்ணாடிகளைக் கொண்டு பொறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த மிரட்டல் கடிதத்தைத் தொடர்ந்து மராட்டிய மாநிலம் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் சல்மான். அரசு தரப்பில் அதற்கு உரிமம் வழங்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், நடிகர் சல்மான் கானுக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர்.