ரஜினி மகள் படத்திலிருந்து விலகிய பிரபலம்!

 ரஜினி மகள் படத்திலிருந்து விலகிய பிரபலம்!

தணிக்கை குழுவினரின் பாராட்டை பெற்ற ‘மெய்ப்பட செய்’ திரைப்படம் ஜனவரி 27 ஆம் தேதி வெளியாகிறது
ரஜினி மகள் படத்திலிருந்து விலகிய பிரபலம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்தமகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது, தனது இயக்கத்தில் உருவாக இருக்கும் லால் சலாம் படத்தின் வேலைகளில் மும்முரமாக இருந்து வருகிறது.

இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவிருக்கிறார். விஷ்ணு விஷால் விக்ராந்த் உள்ளிட்டோர் படத்தின் ஹீரோக்களாக நடிக்கவிருக்கின்றனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.

படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படவிருக்கும் நிலையில், படத்தில் இருந்து மிக முக்கியமான பிரபலம் படத்திலிருந்து விலகியுள்ளார்.

இந்த படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் திடீரென ‘லால் சலாம்’ படத்தில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதற்கட்ட பணிகளின் போது கருத்து வேறுபாடு காரணமாக நான் ‘லால் சலாம்’ படத்தில் இனி பணிபுரிய போவதில்லை. இனி வரும் போஸ்டர்களில் இருந்து என் பெயரை நீக்கி விடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Related post