தங்கலான் படத்திற்காக சிலம்பம் கற்றுக் கொள்ளும் மாளவிகா மோகனன்!

 தங்கலான் படத்திற்காக சிலம்பம் கற்றுக் கொள்ளும் மாளவிகா மோகனன்!

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தங்கலான்.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரொமோஷனை முடித்த கையோடு படப்பிடிப்பில் கலந்து கொண்டார் விக்ரம். ஆனால்,, துரதிர்ஷ்ட வசமாக விபத்தில் சிக்கிக் கொண்டார் விக்ரம்.

இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது ஓய்வில் இருந்து வருகிறார் விக்ரம். இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக நடித்து வரும் மாளவிகா மோகனன், சிலம்பம் கற்றுக் கொள்ளும்படியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தங்கலான் படத்திற்காக தயாராகி வருவதாக கூறியுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

Related post