“மாளிகபுரம்” என்னுடைய மற்ற படங்கள் போல் இல்லை – உன்னி முகுந்தன் நெகிழ்ச்சி;

 “மாளிகபுரம்” என்னுடைய மற்ற படங்கள் போல் இல்லை – உன்னி முகுந்தன் நெகிழ்ச்சி;

மலையாள சூப்பர் ஹிட் படமான #மாளிகபுரம் தமிழில் வருகிற 26ம் தேதி தமிழில் வெளியாகிறது. மிகுந்த எதிபார்ப்புகுரிய இப்படத்தின் பத்திரிகையாளர்களின் சிறப்பு காட்சி நடைப் பெற்றது. முடிவில் பத்திரிகையாளர் சந்திப்பும் நடை பெற்றது.

அப்போது, படக்குழுவினர்கள் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டனர்.

ஹீரோ நடிகர் உன்னி முகுந்தன் :

மாளிகபுரம் என்னுடைய மற்ற படங்களைப் போல் வெறும் திரைப்படம் மட்டுமல்ல. இதுவரை 30 படங்களில் நடித்திருக்கிறேன். அதில் மிக முக்கியமான படமாக மாளிகபுரம் இருக்கும். இந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

நானும் ஐயப்பன் பக்தன் தான். இறுதிக் காட்சியில் என்னை மாற்றிக் கொள்ளும் அருமையான காட்சியைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு சிறுமி ஐயப்பன் கோவிலுக்கு போக வேண்டும் என்று ஆசைப் படுகிறாள். அவர் எப்படி சென்று வருகிறாள் என்பதே படத்தின் ஒருவரி கதை. தேவ நந்தா மற்றும் குட்டிபையன் என்னுடன் 50 நாட்கள் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் வாழ்த்துகள். தேவநந்தாவுக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறினார். அதற்காக அவருடைய அப்பாவிற்கு வாழ்த்துகள்.

நடிகர் சம்பத் ராம் :

நான் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. அதில் இந்த படத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த படத்தில் அனைவரும் விரதம் இருந்து தான் படப்பிடிப்பு நடத்தினோம். 6 முறை இப்படத்தை பார்த்தேன். 6 முறையும் கண்கள் கலங்கியது.

உன்னி சார் படப்பிடிப்பு இல்லாத நாட்களிலும் படபிடிப்பு தளத்திற்கு வந்து அனைத்து பணிகளையும் செய்வார். இப்படத்திற்கு தூணாக இருந்தது இசையும், பின்னணி இசையும் தான். இந்த படத்திற்கு எங்களின் கடின உழைப்பு வீண் போகவில்லை என்றார்.

இசையமைப்பாளர் ரஞ்சன் ராஜா பேசும்போது..

கடாவர் படத்திற்கு பிறகு இரண்டாவதாக இந்த மேடையில் நிற்கிறேன். குழுவாக சேர்ந்து உழைத்தோம். முக்கியமாக ஐயப்பனின் அருளால் தான் மாபெரும் வெற்றியடைந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. இசை எல்லா இடத்திலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சிறுமி தேவ நந்தா பேசும்போது..

இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அதேபோல், இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி. அனைவரும் மாளிகப்புரம் படத்தை திரையரங்கிற்கு வந்து பார்த்து மாபெரும் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி என்றார்.

Related post