இன்று வெளியாகிறது “மல்லிப்பூ” பாடல் வீடியோ… ரசிகர்கள் உற்சாகம்!!
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு.
படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக பம்பர் ஹிட் அடித்துள்ளதாக தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தெரிவித்துள்ளார்.
இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் ஏ ஆர் ரகுமான். படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ என்ற பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது.
இதனைத் தொடந்து இந்த மல்லிப்பூ பாடல் இன்று யூ டியூப் தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.