மணிகண்டன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி!

 மணிகண்டன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி!

இயக்குனர் மணிகண்டன் காக்கா முட்டை படத்தின் மூலம் சினிமா உலகை திரும்பி பார்க்க வைத்தவர். இப்படத்திற்காக அவர் தேசிய விருதினை பெற்றார்.

இப்படத்தினைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை, கடைசி விவசாயி படத்தினை இயக்கினா. இவர் இயக்கிய நான்கு படங்களில் மூன்று படங்கள் விஜய்சேதுபதியை வைத்து இயக்கியிருக்கிறார்.

இந்நிலையில், தனது அடுத்த படத்தையும் விஜய் சேதுபதியை வைத்து தான் இயக்கவிருக்கிறாராம்.. இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post