புத்தகத்தில் இல்லாத ஒரு கதாபாத்திரம்… ஏ ஆர் ரகுமானை புகழ்ந்த மணிரத்னம்!

 புத்தகத்தில் இல்லாத ஒரு கதாபாத்திரம்… ஏ ஆர் ரகுமானை புகழ்ந்த மணிரத்னம்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

விழாவில், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, சரத்குமார், கலை இயக்குனர் தோட்டா தரணி, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸோடு இணைந்து லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவரும் ஏ ஆர் ரகுமானை புகழ்ந்த வண்ணம் இருந்தனர்.

ஏ ஆர் ரகுமானின் இசை படத்தில் பெரிதாக பேசப்படும் என இயக்குனர் மணிரத்னம் கூறினார். ஏ ஆர் ரகுமானை மேடைக்கு அழைக்கும் போது, இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரம். புத்தகத்தில் இல்லாத ஒரு கதாப்பாத்திரம் இசை.

இசையின் மறுபெயரான ஏ. ஆர். ரஹ்மான் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம் என்று அழைத்தனர்.

அப்போது அரங்கமே ரசிகர்களின் கைதட்டலாலும் விசில்களாலும் ஆரவாரம் கொண்டது.

 

Related post