மறக்குமா நெஞ்சம் விமர்சனம் 3.25/5

 மறக்குமா நெஞ்சம் விமர்சனம் 3.25/5

இயக்கம்: இரா கோ யோகேந்திரன்

நடிகர்கள்: ரக்‌ஷன், மலினா, தீனா, ராகுல், ஸ்வேதா வேணுகோபால், முத்தழகன், மெல்வின், முனீஷ்காந்த், அருண், அகிலா, ஆஷிகா,

ஒளிப்பதிவு: கோபி துரைசாமி

இசை: சச்சின் வாரியர்

தயாரிப்பாளர்கள்: ரகு எல்லூரு, ரமேஷ், ஜனார்தன் செளத்ரி, ராகோ யோகேந்திரன்

கதைப்படி,

பள்ளி, கல்லூரி வாழ்க்கை முடித்து சொந்த நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் ரக்‌ஷன். இவரது நண்பராக வருகிறார் தீனா.

ரக்‌ஷனுக்கு தான் படித்த பள்ளியின் ஞாபகம் அடிக்கடி வந்து செல்கிறது. குறிப்பாக, பள்ளியில் தன்னோடு படித்த மலினாவுடனான ஒரு தலை காதலை ரொம்பவும் தேடுகிறார்.

இச்சமயத்தில், ரக்‌ஷன் படித்த பள்ளியில் பிரச்சனை ஒன்று ஏற்பட, ரக்‌ஷன் படித்த கல்வியாண்டில் எழுதிய தேர்வு அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், மீண்டும் அந்த கல்வியாண்டில் படித்த மாணவர்கள் படித்து தேர்வு எழுத வேண்டும் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வருகிறது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் ரக்‌ஷன் உட்பட அவருடன் படித்த மாணவ, மாணவியர்கள் அந்த பள்ளியில் ஒன்று கூடுகின்றனர்.

மூன்று மாத காலம் அங்கு பயில்கின்றனர். பள்ளி சிறுவனாக இருக்கும்போதே சொல்லாத காதலை ரக்‌ஷன், மலினாவிடம் கூறினாரா இல்லையா.?? அதற்கு மலினாவின் பதில் என்னவாக இருந்தது.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகனாக ரக்‌ஷனுக்கு முதல் படம் என்பதால், தனது காட்சிகள் ஒவ்வொன்றும் மெனக்கெடல் செய்தே நடித்திருக்கிறார். ஒரு சில இடங்களில் இன்னும் கொஞ்சம் நல்லா நடித்திருக்கலாமோ என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால், முதல் படத்திலேயே இப்படியொரு நடிப்பா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கும் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார் ரக்‌ஷன்.

நாயகி மெலினா, பார்ப்பதற்கு அழகாகவும் நடிப்பில் அளவாகவும் வந்து காட்சிகளில் உயிர் கொடுத்திருக்கிறார். ரக்‌ஷனுக்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது.

முனீஸ்காந்த் காட்சிகள் படத்திற்கு பலம். இன்னும் சற்று அவரை உபயோகப்படுத்திருக்கலாமே என்று தோன்றியது. தீனாவின் கெளண்டர் காமெடி ஆங்காங்கே எடுபட்டிருக்கிறது. ஒரு சில இடங்களில் சறுக்கல் இருந்ததை மறுக்க முடியாது.

இப்படத்தில் பள்ளி வாழ்க்கையில் நம்மை மீண்டும் பள்ளிக்கே அழைத்துச் செல்லும் விதமாக காட்சிகளை கச்சிதமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

பாடல்கள் மயிலிறகாக வருடியது படத்திற்கு பலம். ப்ராங்க் ஸ்டார் ராகுல் தனது உருவ அமைப்பை வைத்து காட்சியை நகர்த்தியது படத்திற்கு வலு சேர்த்திருந்தது. நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக நடனம் அப்ளாஷ் தான்.

நடித்த நடிகர்கள் அனைவருமே கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்திருந்தது படத்திற்கு பெரும் பலம் தான்.

நட்புகளின் கலந்துரையாடல் ரசிக்க வைத்தது.

ஒளிப்பதிவு மற்றும் இசை படத்திற்கு கூடுதல் பலம். ஒரு சில லொகேஷன்கள் கண்களை கவர்ந்தது.

மறக்குமா நெஞ்சம் – மீண்டும் பள்ளிக்கு போகலாம்…

 

Spread the love

Related post