கானா பாடல்களால் நிறைந்த கானசபை

 கானா பாடல்களால் நிறைந்த கானசபை

நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த இந்த ஆண்டிற்க்கான மார்கழியில் மக்களிசை மதுரையில் 18-ஆம் தேதியும், கோவையில் 19-ஆம் தேதியும் நடைபெற்று மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 31 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இம்மார்கழியில் மக்களிசை ஐந்தாவது நாளாக சென்னை கிருஷ்ணா கானா சபாவில் கோலாகலத் திருவிழாவாக “கானா பாடல்கள்” என பெயரிடப்பட்டு நடந்தது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா அவர்கள் “இந்நிகழ்ச்சியில் பாடிய கானா கலைஞர்களை அரசாங்கத்தின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்வேன்” என்றும் கவிஞர் கபிலன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறி மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

பின்பு கவிஞர் கபிலன் அவர்கள் “இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களுக்கு மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி முதன் முறையாக கிருஷ்ணா கானா சபாவில் நடத்தியதற்க்காக பாராட்டுகளை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய பா.ரஞ்சித் அவர்கள் மற்ற இசைக்கலைஞர்களை போல இக்கானா இசைக் கலைஞர்களுக்கும் கலை மாமனி விருது வழங்குவதற்கான முயற்சியை தமிழக அரசிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறி மற்றும் கவிஞர் கபிலன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை சிறப்பித்து கூறினார்.

இம்மார்கழி மக்களிசையில் கலந்துக்கொண்ட அனைத்து கானா மக்களிசை கலைஞர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்களின் கரங்களால் விருது கொடுத்து சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மேலும் நாளை 29/12/2021 தமிழ் இசை சங்கத்தில் நடைபெறும். அனைவரும் வாரீர் அன்போடு அழைக்கிறோம்.

Spread the love

Related post

You cannot copy content of this page