மக்களிசை நான்காவது நாளாக சென்னை ஐஐடி-யில் கோலாகலத் திருவிழாவாக “ஜெய் பீம்” நிகழ்ச்சி என பெயரிடப்பட்டு நடந்தது

 மக்களிசை நான்காவது நாளாக சென்னை ஐஐடி-யில் கோலாகலத் திருவிழாவாக “ஜெய் பீம்” நிகழ்ச்சி என பெயரிடப்பட்டு நடந்தது

நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த இந்த ஆண்டிற்க்கான மார்கழியில் மக்களிசை மதுரையில் 18-ஆம் தேதியும், கோவையில் 19-ஆம் தேதியும் நடைபெற்று மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 31 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மார்கழியில் மக்களிசை நான்காவது நாளாக சென்னை ஐஐடி-யில் கோலாகலத் திருவிழாவாக “ஜெய் பீம்” நிகழ்ச்சி என பெயரிடப்பட்டு நடந்தது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக விசிக துணை பொது செயலாளர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் “இது இசை நிகழ்ச்சி அல்ல போராட்டத்தின் வடிவம் என்றும் இதுபோன்ற கலைநிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன் என்றும் கூறி ,பின்பு உரிமையை அனைவரும் சமமாக பகிர்ந்து பயன்பட வேண்டும் என்றும் மார்கழியில் மக்களிசையை சிறப்பித்து கூறினார்”.

நிகழ்ச்சியில் அடுத்ததாக உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் “எங்கோ இருக்கும் கலைஞர்களை ஐஐடி-யில் இருக்கும் இம்மேடையில் அரங்கேற்றியது பெரும் மகிழ்ச்சியை அளித்தது”.என்றுக்கூறி மார்கழியில் மக்களிசையை சிறப்பித்தார்.

சமூக செயற்ப்பாட்டாளரான கவின் மலர் அவர்கள் ” சமூக செயற்ப்பாட்டாளர் மற்றும் பாடகர் தலித் சுப்பையா அவர்களின் பாடலைக் கேட்டு வளர்ந்தவள் நான்” என்றும் இம்மார்கழியில் மக்களிசையில் கலந்துக்கொண்டது மிக மகிழ்ச்சியை தந்தது என்று சிறப்பித்து கூறினார்.

நிகழ்ச்சியன் முடிவில் பேசிய பேராசிரியர் மற்றும் ஆலோசோகர் அரங்க மல்லிகா அவர்கள் “அண்ணல் அம்பேத்கரின் அரசியல் இன்றைக்கும் என்றென்றைக்கும் தேவை” என்று மிக உற்சாகமாக மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை சிறப்பித்து கூறினார்.இம்மார்கழி மக்களிசையில் கலந்துக்கொண்ட அனைத்து மக்களிசை கலைஞர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்களின் கரங்களால் விருது கொடுத்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மேலும் நாளை 28/12/2021 கிருஷ்ணா கானா சபாவில் நடைபெறும். அனைவரும் வாரீர் அன்போடு அழைக்கிறோம்.

Related post